தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு –
1 min read
Increase in allowance for temporary teachers
16.3.2023
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிப்புரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.ரூ.18,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் 221 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிதாக 194 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 415 அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.