காஷ்மீரில் இந்து மத வழிபாட்டு தலத்தில் மெகபூபா முப்தி வழிபாடு
1 min read
Mahabooba Mufti worship at a Hindu shrine in Kashmir
16.3.2023
காஷ்மீரில் இந்து மத வழிபாட்டு தலத்தில் மெகபூபா முப்தி வழிபாடு செய்தார்.
மெகபூபா முப்தி
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமானவர் மெகபூபா முப்தி. இவர் இன்று காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான நவகிரகா வழிபாட்டு தலத்திற்கு சென்ற அவர் அங்கு சிவலிங்கத்திற்கு தண்ணீரால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார்.
இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.