இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 நாளில் இருமடங்கு உயர்வு
1 min read
Daily corona cases in India doubled in 4 days
18.3.2023
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 843 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 14-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 402 ஆக இருந்தது. மறுநாள் 618, 16-ந்தேதி 754, நேற்று 796 ஆக இருந்த நிலையில் இன்றும் பாதிப்பு உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 4 நாட்களில் தினசரி பாதிப்பு இருமடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 12-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 833 ஆக இருந்தது. அதன்பின்னர் 4 மாதங்கள் கழித்து தற்போது தினசரி பாதிப்பு மீண்டும் 800-ஐ தாண்டியுள்ளது.
இன்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 197 பேர், கேரளாவில் 133 பேர், கர்நாடகாவில் 127 பேர், குஜராத்தில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 94 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 476 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 58 ஆயிரத்து 161ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றுக் காலை நிலவரப்படி 5,389 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுமுந்தைய நாள் விட 363 அதிகமாகும்.
கொரோனா பாதிப்பால் இன்று மகாராஷ்டிரா, ஜார்கண்டில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,799 ஆக உயர்ந்துள்ளது.