சர்வதேச போலீசால் தேடப்படுபவர்கள் பட்டியலில்
மெகுல் சோக்சி பெயரை மீண்டும் சேர்க்க சி.பி.ஐ. வலியுறுத்தல்
1 min read

On the international police wanted list CBI to reinstate Mehul Choksi name Emphasis
22.3.2023
மெகுல் சோக்சியின் பெயரை தேடப்படுபவர்கள் பட்டியலில் இருந்து ‘இன்டர்போல்’ (சர்வதேச போலீஸ்) நீக்கி உள்ளது.
மெகுல் சோக்சி
பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றி ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சியின் பெயரை தேடப்படுபவர்கள் பட்டியலில் இருந்து ‘இன்டர்போல்’ (சர்வதேச போலீஸ்) நீக்கி உள்ளது. ஆனால், இந்த நடவடிக்கையை எடுத்தது, சர்வதேச போலீஸ் கட்டுப்பாட்டில் இல்லாத ‘இன்டர்போல் கோப்புகள் கட்டுப்பாட்டு ஆணையம்’ என்ற தனியான இன்டர்போல் அமைப்பு என்று தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில், மெகுல் சோக்சி பெயரை தேடப்படுபவர்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்குமாறு அந்த அமைப்பை சி.பி.ஐ. கேட்டுக்கொண்டுள்ளது. மெகுல் சோக்சி பெயரை நீக்கியது தவறான முடிவு என்றும், விதிமீறல் என்றும் கூறியுள்ளது.