July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கும் திட்டங்கள் விவரம்

1 min read

Details of projects to be inaugurated by Prime Minister Modi in Tamil Nadu

7.4.2023
தமிழகத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கும் திட்டங்கள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னைக்கு மோடி

சென்னைக்கு பிரதமர் நரேந்திரமோடி நாளை (சனிக்கிழமை) மதியம் 3 மணியளவில் வரும்போது 3 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.12.60 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை செயல்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.
விமான நிலையத்தில் புதிய கட்டுமானங்களை சுற்றிப்பார்த்துவிட்டு வரும் பிரதமர் மோடி பல்லாவரத்தில் நடைபெறும் பிரமாண்ட விழா மேடையில் இருந்தபடி இந்த புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை ‘பொத்தான்’ அமுக்கி திறந்து வைக்கிறார்.

செங்கோட்டை ரெயில்

தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலையும் விழா மேடையில் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ரெயில் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
மேலும் நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரெயில்பாதை திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். மதுரையில் செட்டி குளம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.785) 4 வழிசாலை திட்டத்தையும் நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டத்தையும் போக்குவரத்துக்கு திறந்து வைக்கிறார். இதுதவிர திருமங்கலம்-வடுகப்பட்டி இடையே (என்.எச்.744) யான 4 வழிச் சாலை திட்டத்துக்கும் வடுகப்பட்டி-தெற்கு வெங்கநல்லூர் (என்.எச்.744) இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.2400 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விழா மேடையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள், அடிக்கல் நாட்டும் திட்டங்கள் குறித்த குறும்படம் எல்.இ.டி.திரை மூலம் காண்பிக்கப்பட உள்ளது.
விழா மேடையில் பிரதமருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் எல்.முருகன், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ், தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் அமர இருக்கை போடப்படுகிறது. மத்திய மந்திரி எல்.முருகன் வரவேற்று பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் ஆகியோர் பேசுகின்றனர். பிரதமர் பங்கேற்று பேசும் பல்லாவரம் அல்ஸ்டோம் கிரிக்கெட் மைதானத்தில் பொது மக்கள் அமர 20 ஆயிரம் நாற்காலிகள் போடப்படுவதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.