சிறுவனின் உதட்டில் முத்தமிட்ட தலாய்லாமா
1 min read
The Dalai Lama kissed the boy on the lips
10.4.2023
சிறுவனின் உதட்டில் முத்தமிட்ட தலாய்லாமா பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனை அடுத்து அவர் மன்னிப்பு கேட்டார்.
தலாய்லாமா
திபெத்திய புத்தமத தலைவரான தலாய்லாமா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு அடுத்த தலாய்லாமா, ஒரு பெண்ணாக இருந்தால் அவர் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என தலாய்லாமா கூறியது சர்ச்சையானது. இதனால் அவர் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் தற்போது தன்னிடம் ஆசி பெற வந்த சிறுவன் ஒருவனின் உதட்டோடு உதடு வைத்து தலாய்லாமா முத்தமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
வீடியோ எங்கு, அப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் சம்பவம் தொடர்பான வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
அதில், மேடையில் அமர்ந்து இருக்கும் தலாய்லாமாவிற்கு மரியாதை செலுத்துவதற்காக மேலே வந்துள்ளார். அப்போது அருகே வந்த சிறுவனை பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த அனைவரும் சிரித்துள்ளனர். அதைதொடர்ந்து சில விநாடிகளுக்குப் பிறகு வாயிலிருந்து தனது நாக்கை வெளியே நீட்டிய தலாய் லாமா, அதனை முத்தமிடுமாறு தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார். முதலில் ஆட்சேபனை தெரிவிக்கும் விதமாக சிறுவன் பின்னே சென்றுள்ளான். ஆனால், தலாய் லாமா அவனது கையை பிடித்து இருந்ததால், தலாய் லாமாவின் நாக்கில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளான்.
இந்த வீடியோ வெளியானதை அடுத்து தலாய் லாமாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக தொல்லை செய்வது சட்டவிரோத செயல். மேலும் இந்த குற்றச்செயல் செய்தவரின் மீது போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலாய் லாமா செய்தது அத்துமீறல் என ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வர பல்வேறு தரப்பினர்கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மன்னிப்பு
இந்த நிலையில் சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா அறிவித்துள்ளார். சிறுவன், அவரது குடும்பம் மட்டுமின்றி உலக சகோதரர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். தனது செயல் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தலாய்லாமா கூறியுள்ளார். பொது இடம், கேமரா முன் அப்பாவி, விளையாட்டுத்தனமாக தான் செயல்படுவது வழக்கம் எனவும் தலாய்லாமா விளக்கம் அளித்துள்ளார்