சிதம்பரத்தில் ரூ.52 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது
1 min read
2 people arrested with fake notes of Rs.52 thousand in Chidambaram
11/4/2023
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வங்கியில் செலுத்த முயன்றபோது ரூ.52 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளநோட்டு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே முடசல் ஓடை மீனவ கிராம பகுதியில், தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் டீசல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பங்க்கில் இருந்து அப்பகுதியில் உள்ள படகுகளுக்கு டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு கடலூர் தேவனாம் பட்டினம் சுனாமி நகரை சேர்ந்த சுதாகர் (வயது 51), பண்ருட்டி ரெட்டிப்பாளை யம் தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் செல்வகுமார்(37) ஆகியோர் ஊழியராக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் வசூலான ரூ.6 லட்சத்து 4 ஆயிரத்து 356-ஐ செல்வகுமார்,சுதாகரிடம் கொடுத்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக வங்கி கணக்கில் செலுத்துமாறு நேற்று முன்தினம் இரவு கூறியுள் ளார்.
இதையடுத்து சுதாகர் நேற்று காலை சிதம்பரம் மேல வீதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு. பணத்தை செலுத்துவதற்காக சென்றார்.அப்போது அவர். அங்கிருந்த வங்கி காசாளரி டம் சில 500 ரூபாய் கட்டு களை கொடுத்தார். அந்த கட்டுகளை காசாளர் வாங்கி எண்ணி பார்த்தபோது. அதில் ஒரு 500 ரூபாய் கட்டு முழுவதும் (100 நோட்டுகள்) கள்ள நோட்டுகளாக இருந் தன.மேலும் சில கட்டுகளில் இடைஇடையே என மொத் தம்4கள்ள நோட்டுகள் இருந்தன.அதன்படி மொத்தம் ரூ.52 ஆயிரம் கள்ள நோட்டு இருந்தன .
கைது
இதுபற்றி அறிந்த வங்கி மேலாளர் வீரபத்திரன்,சுதாகரிடம் பணம் எப்படி வந்தது என்று கேட்டுள்ளார்.அதற்கு அவர் தன்னுடன் வேலை பார்க்கும் செல்வகுமார் கொடுத்ததாக தெரிவித்தார். பின்னர் அவரையும் வங்கிக்கு வரவழைத்தார். தொடர்ந்து இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மற்றும் போலீசார் வங்கிக்கு விரைந்து வந்து 2 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.தொடர்ந்து அவர்களிடம், கள்ள நோட்டுகள் எப்படி கிடைத்தது என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.