களியக்காவிளையில் தமிழ்கனவு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விருது
1 min read
Award to students in Tamil Kanav program at Kalikavlai
11.4.2023
களியக்காவிளையில் தமிழ்கனவு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழ்கனவு
முதலமைச்சர் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியானது களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக்கண்காட்சி, நான் முதல்வன் திட்டம், வேலை வாய்ப்பு அலுவலகம், உயர்கல்வி வழிகாட்டுதல், வங்கி கடன், மாவட்ட தொழில் மையம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட துறைசார்ந்த அரங்குகளை பார்வையிட்டார்.
ஊடகவியலாளர் செந்தில்வேல் மங்காத தமிழும் மதநல்லிணக்கமும் என்ற தலைப்பிலும், திரைப்பட இயக்குநர் ராஜு முருகன் வாழ்வென்பதோர் கீதம் என்ற தலைப்பிலும் பேசினார்கள்.
விருது
நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியிலிருந்து 11 கல்லூரிகள் சுமார் 1000 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மாணவர்களுக்கு பெருமித செல்வன், பெருமித செல்வி, கேள்வி நாயகன், கேள்வி நாயகி ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் முனைவர்.சா.அமுதன், முனைவர்.அ.ஜோதி
ரவீந்திரன் ஆகியோர் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சுப்பையா, தமிழ் இணையக் கல்வி கழக பொறுப்பு அலுவலர் திரு.சித்தானை, உசூர் மேலாளர் (பொது) திரு.ஜுலியன்
ஹீவர், விளவங்கோடு வட்டாட்சியர் (பொ) திரு.சி.ராஜசேகர், நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர்.அமலநாதன், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.