காவிரி மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் டெல்லியில் நடந்தது
1 min read
The 20th meeting of the Cauvery Management Commission was held in Delhi
11.4.2023
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. கோடைக்கால நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம்
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் ஆலோசனை நடந்தது. தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது தவிர கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கோடைகால நீர் பங்கீடு
கோடைக்கால நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பருவமழை மற்றும் பாசன ஆண்டு விரைவில் தொடங்க உள்ள நிலையில் காவிரியில் மழைஅளவு, நீர் வரத்து, நீர் இருப்பு, தரவுகள் பற்றி மற்ற அம்சங்கள் குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.