எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது- தேர்தல் ஆணையத்தில் ஒபிஎஸ் மனு
1 min read
Edappadi Palaniswami should not be recognized – OPS petition in Election Commission
18.4.2023
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஒ.பன்னீர் செல்வம் மனு செய்துள்ளார்.
அ.தி.மு.க.
அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், 10 நாட்களில் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தான் நீடிப்பதாகவும், தனது பதவி காலாவதியாகவில்லை என்றும் எனவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.