இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது
1 min read
In India, the daily number of corona cases fell below 8,000
18.4.2023-
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில்தற்போது கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று 9 ஆயிரத்து 111 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று சற்றே குறைந்து உள்ளது பாதிப்பு.இன்று காலைவரை கடந்த 24 மணிநேரத்தில் 11 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5,31, 152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 60,313 லிருந்து 61, 233 ஆக உயர்ந்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,27, 226 லிருந்து 4,48,34,859 ஆக உயர்ந்து உள்ளது.