திருச்சி-விருதுநகர் இடையே எழும்பூர்-செங்கோட்டை ரெயில் நேரம் மாற்றம்
1 min read
Timings of Egmore-Sengottai train between Trichy-Virudunagar
19.4.2023
சென்னை எழும்பூர்-செங்கோட்டை இடையே செல்லும் விரைவு ரெயிலின் பயண நேரத்தில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது. திருச்சியில் வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 1.50 மணிக்கு புறப்படும்.
செங்கோட்டை ரெயில்
சென்னை எழும்பூர்-செங்கோட்டை விரைவு ரெயில் திருச்சி-விருதுநகர் இடையே பயண நேரத்தில் நாளை (19-ந்தேதி) முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை எழும்பூர்-செங்கோட்டை இடையே செல்லும் விரைவு ரெயிலின் (வண்டி எண்.20681) பயண நேரத்தில் நாளை (19-ந் தேதி) முதல் மாற்றம் செய்யப்படுகிறது. திருச்சியில் வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 1.50 மணிக்கு புறப்படும். புதுக்கோட்டையில் இருந்து அதிகாலை 2.47 மணிக்கு பதிலாக 2.35 மணிக்கு புறப்படும்.
காரைக்குடியில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 3.10 மணிக்கும், தேவகோட்டையில் இருந்து 3.27 மணிக்கு பதிலாக 3.17 மணிக்கும், சிவகங்கையில் இருந்து 3.54 மணிக்கு பதிலாக 3.44 மணிக்கும் புறப்படும். மானாமதுரையில் இருந்து அதிகாலை 4.22 மணிக்கு பதிலாக 4.12 மணிக்கும், அருப்புக்கோட்டையில் இருந்து அதிகாலை 5.05 மணிக்கு பதிலாக 4.55 மணிக்கு புறப்படும். விருதுநகரில் இருந்து வழக்கம்போல அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும்.
மற்ற ரெயில் நிலையங்களில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்
சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி குஜராத் மாநிலம் துவாரகா-மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. நாளை (19-ந்தேதி) முதல் 29-ந்தேதி வரை 11 நாட்கள் இந்த சிறப்பு ரெயில் (எண்.06302) இயக்கப்படுகிறது. தினமும் இரவு 10.40 மணிக்கு துவாரகா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 4-வது நாள் காலை 10.30 மணிக்கு மதுரை வந்தடையும். துவாரகாவில் புறப்படும் இந்த ரெயில் ராஜ்கோட், சுரேந்திர நகர், அகமதாபாத், லதோரா, சூரத், நந்தர்பர், ஜல்கான், அகோலா, நந்தேட், காச்சிகுடா, ரேனிகுண்டா, சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை வந்தடையும்.