கூட்டுறவு வங்கிதுணை தலைவருக்கு கொலை மிரட்டல்;
ஆவுடையானூர் பஞ்.தலைவர் மீது புகார்
1 min read

Death threat to co-operative bank vice-chairman; Complaint against Audhaiyanur Panj President
23/4/2023
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, ஆவுடையானூர் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டார் 3 பேர் மீது கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர்-பொடியனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 47). இவர் நாகல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவராக உள்ளார். இவர் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளம்
கூட்டுறவு வங்கி துணைத் தலைவராக உள்ள நான், ஏப்.20ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக, பட்டாக்கள் குறித்த விவரம் கேட்பதற்காக ஆவுடையானூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்றேன். அப்போது அங்கு, தென்காசி கோட்டாட்சியர் ஒரு புகார் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரியிடம் விசாரணை நடத்தி வந்தார்.
அந்த சமயத்தில் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் என்ற அடிப்படையில் சில விளக்கங்ளை தெரிவித்தேன். இதற்கு ஆவுடையானூர் ஆவுடைசிவன் பட்டியை சேர்ந்த நயினார்நாடார் மகன் முருகன் (வயது 50), ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவராக குத்தாலிங்கராஜன் (எ) கோபி (வயது 45), மாடியனூர் ராசாமிநாடார் மகன் பொன்ராஜ் (வயது 42) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, என்னை தாக்க முயன்றதுடன், மற்றும் சிலருடன் சேர்ந்து, அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே எனது உயிருக்கு ஆபத்து வரக்கூடிய நிலை உள்ளதால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.