ஜவுளிக்கடையில் ஒரு புடவைக்காக 2 பெண்கள் குடுமிபிடி சண்டை
1 min read
2 women fight over a saree at a textile shop in Bengaluru
24.4.2023
கர்நாடகாவில் ஜவுளிக்கடையில் ஒரு புடவைக்காக இரண்டு பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வாக்குவாதம் குடுமிபிடி சண்டையில் முடிந்தது. அங்கு வந்த மற்றவர்கள், சண்டையை பொருட்படுத்தாமல், புடவை வாங்குவதில் கவனம் செலுத்தினர்.
ஜவுளிக்கடை
பெங்களூரூவின் மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை ஒன்றில் வருடாந்திர விற்பனையை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதை அடுத்து புடவை வாங்க வந்த இரு பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வாக்குவாதம் குடுமிபிடி சண்டையில் முடிந்தது. இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இரு பெண்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்த போதிலும், அங்கு வந்தவர்கள், அதனை பொருட்படுத்தாமல், புடவை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தினர்.
கடையில் காவலராக பணியாற்றி வருபவர் மட்டும் பெண்களிடையே ஏற்பட்ட சண்டையை தடுக்க முயன்றார். எனினும், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ, ‘மல்லேஸ்வரம் மைசூர் பட்டு புடவை வருடாந்திர விற்பனை.. இரு வாடிக்கையாளர்கள் ஒரு புடவைக்காக சண்டையிடுகின்றனர்,’ எனும் தலைப்பில் டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பதிவான குறுகிய நேரத்திற்குள் வீடியோவினை சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.