12 மணி நேர வேலை திருத்த சட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்தது
1 min read
The Tamil Nadu government suspended the 12-hour work amendment act
24.4.2023
12 மணி நேர வேலை திருத்த சட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.
12 மணி நேர வேலை
தமிழ் நாட்டில் 12 மணி நேர வேலை திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. 12 மணி நேர வேலை திருத்த சட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 ணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக சட்ட மசோதா சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும், வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12-ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தன.
இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறையின் 12 மணி நேர வேலை திருத்த சட்ட செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.