இரவணசமுத்திரம் கல்லூரியில் இருபெரும் விழா
1 min read
A grand celebration at Ravanasamudram College
26.4.2023
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள இரவணசமுத்திரம் சேவாலயாவின் மகாகவி பாரதியார் சமுதாய கல்லூரியில் புனித ரமலான் விழா மற்றும் பள்ளி மாணவிகள் சான்றிதழ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு மாலிக் நகர் ஹிலால் தொடக்கப்பள்ளி செயலர் ஜனாப் லாலுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததோடு மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி மகிழ்ந்தார. இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் தையல் பயிற்சி ஆசிரியை வரவேற்று பேசினார்
மாணவியர் ஜமுனா சுமதி முத்துலட்சுமி ஆகியோர் பாரதியின் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடலை வாழ்த்து பாடலாக பாடி துவங்கி வைத்தார்கள். சிறப்பு விருந்தினர் உரையாற்றும் பொழுது ஜாதி மத பாகுபாடு இல்லாமல் சேவாலயா கடந்த நான்கு ஆண்டுகளாக நமது பகுதியில் செய்து வரும் தொண்டு பாராட்டுக்குரியது அதனுடைய இந்த விழாவில் நான் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன் என்று உரையாற்றினார்.
இந்த விழாவில் கடந்த தையல் பயிற்சி வகுப்பில் படித்த மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்கள். திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தான் விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார்கள். முடிவில் செவிலியர் சகாய பிரியா அனைவருக்கும் நன்றி கூறினார்.