July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

பழைய குற்றாலம் பகுதியில் மீண்டும் தனுஷ் படப்பிடிப்பு நடத்த அனுமதி

1 min read

Dhanush is allowed to shoot again in Old Courtalam area

28.4.2023
தென்காசி மாவட்டம், குற்றாலம்,
பழைய குற்றாலம், மத்தளம்பாறை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் கேப்டன் மில்லர் எனும் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இதில் உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடப்பதாக பல்வேறு தரப்பினர் புகார் அளித்த நிலையில் கடந்த 25 ம் தேதி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அதே பகுதியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திட தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி வழங்கி உள்ளார்.

பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் கேப்டன் மில்லர் எனும் திரைப்படம் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் முதல் குற்றாலம், பழைய குற்றாலம், மத்தளம் பாறை, உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக் குழுவினர் பிரம்மாண்டமாக கோவில், மற்றும் வீடுகள் 50க்கும் மேற்பட்ட குடிசைகள், ராணுவ முகாம்கள், உள்ளிட்ட அரங்குகளை அமைத்ததோடு பல்வேறு சண்டை காட்சிகள், ராணுவ வாகனங்கள் அணிவகுத்து வரும் காட்சிகள், துப்பாக்கி சுடுதல், குண்டு வெடித்தல், உள்ளிட்ட காட்சிகளை படமெடுத்து வந்தனர்.
மேலும் இரவு பகலாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் அதிக வெளிச்சம் உள்ள ஒளி வெள்ள விளக்குகளை பயன்படுத்துவதோடு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான படப்பிடிப்புக் குழுவினர் அந்தப் பகுதியில் நடமாடி வருகிறார்கள்.
மேலும் திரைப்பட நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் அந்த படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்கு வசதியாக பழைய குற்றாலம் அருவியில் இருந்து ஆவுடையானூர் அருகே உள்ள செங்குளம் என்ற குளத்திற்கு செல்லும் கால்வாயை ஜேசிபி கொண்டு அழித்து அதில் குறுக்கே மரப்பாலம் அமைத்து இருந்தனர்.

இது பற்றி அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறி வந்த நிலையில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரும், மதிமுக ஒன்றிய செயலாளரும், இராமநதி ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்ட அமைப்பாளருமான, இராம. உதயசூரியன் அந்தப் பகுதிக்கு சென்று படப்பிடிப்பு குழுவினரிடம் இதுபோல் வனப் பகுதிக்குள் படப்பிடிப்பு நடத்த உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை அழித்து குறுக்காக பாலம் அமைக்க உங்களுக்கு அனுமதி வழங்கியது யார்? வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யும் வகையில் ஒளி வெள்ள விளக்குகள் துப்பாக்கி சுடுதல் பட்டாசு வெடித்தல் வெடிகுண்டு வெடித்தல் போன்ற காட்சிகளை எடுப்பதற்கு உங்களுக்கு அனுமதி வழங்கியது யார்? என்று கேட்டுள்ளார் அதற்கு படப்பிடிப்பு குழுவினர் உரிய பதில் அளிக்காமல் அவரிடம் மிகவும் அவமரியாதையாக நடந்து கொண்டுள்ளனர்.

எனவே உடனடியாக இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வனத்துறை இணை இயக்குனர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், மற்றும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, வனத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

படப்பிடிப்பு ரத்து

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் படப்பிடிப்பு நடந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர். அன்று மாலையில் உடனடியாக எந்தவித அனுமதியும் இன்றி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வரும் வடக்குழுவினர் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த தடை விதிப்பதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனாலும் படப்பிடிப்பு குழுவினர் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்படவில்லை.

இந்நிலையில் சில அமைப்புகள் சார்பில் தென்காசி குற்றாலம் பகுதிகளில் பல்வேறு படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் சுற்றுலா, வருவாய் பொருளாதாரத் திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் பலருக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைப்பதாகவும் கூறியதோடு எனவே படப்பிடிப்புக்கு தடை விதித்தால் இனிவரும் காலங்களில் தென்காசி குற்றாலம் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கு படக்குழுவினர் முன் வர மாட்டார்கள் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்திருந்தாக கூறுகின்றனர்.

அனுமதி

இந்நிலையில் நேற்று மாலை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொதுப்பணித்துறை, வனத்துறை, மற்றும் தீயணைப்பு துறையினர், ம உரிய அனுமதி வழங்கி விட்ட நிலையில் கேப்டன் மில்லர் படக் குழுவினர் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.