July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தோரணமலையில் அதிகரித்து வரும் கிரிவல பக்தர்கள்

1 min read

Increasing number of Kriwala devotees at Thoranamalai

6.7.2023
தோரணமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

கிரிவலம்

கிரிவலம் என்றாலே திருவண்ணாமலைதான் நினைவுக்கு வரும். அடுத்து திருப்பரங்குன்றம், கழுகுமலையிலும் கிரிவலம் வருகிறது. ஆனால் தென்மாவட்டங்களில் தோரணமலை கிரிவலம் தற்போது பிரபலமாகி விருகிறது.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் காலையில் கிரவலம் நடைபெறுகிறது. அதிகாலை 5.30 மணி அளவில் பிள்ளையார் கோவில் பின்புறம் இருந்து புறப்படும் கிரிவலம் மலையை சுற்றிவர சுமார் ஒன்றரை மணிநேரம் ஆகிறது.
ஆரம்பத்தில் கிரிவலத்தில் சுமார் 50 பேர் தான் சென்றனர். நாளுக்கு நாள் பக்கதர்கள் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி அன்று 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கிரிவலம் வந்தனர். அதேபோல் கடந்த தமிழ் தைப்பூசம் அன்றும் காலையில் மட்டுமல்லாமல் பகல் முழுவதும் பக்தர்கள் கிரிவலம் வந்தவண்ணம் இருந்தனர்.
இந்த அசுர வளர்ச்சிக்கு கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் எடுத்துவரும் வளர்ச்சிப் பணிதான் காரணம்.

கிரிவலம் வரும் பக்தர்களுக்கு வழியில் ஓரிடத்தில் தேநீர் மற்றும் பிஸ்கெட் வழங்கப்படுகிறது. சித்ராபவுர்ணமி அன்று கிரிவலம் வந்தவர்களுக்கு உப்புமா, தேநீர் வழங்கப்பட்டது. கிரிவலம் முடித்துவந்த பக்கதர்கள் மற்றும் கோவிலுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் அமர்ந்து சாப்பிட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல் மதியம் அன்னதானம் நடந்தத. இதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தோரணமலை அடிவாரத்தில் உள்ள வல்லபகணபதிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.