தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்த சென்னையை சேர்ந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி
1 min read
Financial assistance of Rs.2 lakh each to the families of 2 people from Chennai who drowned in Tamiraparani river
9.5.2023
தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நிதிஉதவியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தாமிரபரணியில்…
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழத்திருவேங்கடநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது வீட்டிற்கு சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் அருண்குமார் ஆகியோர் நண்பர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.