பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அதிரடி கைது
1 min read
Pak. Former Prime Minister Imran Khan has been arrested
9.5.2023
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார்.
இம்ரான் கான்
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் கைது செய்தனர். இம்ரான் கான் மீது ஊழல், பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் ஊழல் வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரது காரை சுற்றி வளைத்த ரேஞ்சர்கள், அவரை கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
ராணுவத்தை விமர்சித்து பேசியதற்காக அவர்கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் பெரிய அளவில் போராட் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் இருந்து ரேஞ்சர்கள் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் இம்ரான் கானை தாக்கியதாகவும் பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் அசார் மஷ்வானி குறற்ம்சாட்டி உள்ளார்.
கண்டனம்
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்திற்குச் சென்ற இம்ரான் கான், நீதிமன்றத்தில் பயோமெட்ரிக் பதிவு செய்தபோது, ரேஞ்சர்கள் கண்ணாடி ஜன்னலை உடைத்து, வழக்கறிஞர்களையும் பாதுகாப்பு ஊழியர்களையும் தாக்கி, இம்ரான் கானை கைது செய்து கைது செய்ததாக கட்சியின் மூத்த தலைவர் ஷிரீன் மசாரி தெரிவித்துள்ளார்.
என்ன சட்டங்கள் இவை? நிலத்தை ஆக்கிரமிப்பது போல் ரேஞ்சர்களால் நீதிமன்றம் தாக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் தாக்கப்பட்டனர். இதுதான் இன்றைய பாகிஸ்தான். துணை ராணுவப் படைகளால் உயர் நீதிமன்றம் தாக்கப்பட்ட பாசிச நாடு இது. அரச பயங்கரவாதம், ரேஞ்சர்கள் வழக்கறிஞர்களை தாக்கி, இம்ரான் கான் மீது வன்முறையைப் பிரயோகித்து, அவரை கடத்திச் சென்றுவிட்டனர்’ என்றும் மசாரி கூறி உள்ளார்.
ரேஞ்சர்கள் இம்ரான் கானை சட்டை காலரைப் பிடித்து சிறை வேனில் ஏற்றிச் செல்லும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.