மதுரை நாடார் மகாஜன சங்க செயற்குழு உறுப்பினராக ஆதிமூலம் நியமனம்
1 min read
Adi Moolam has been Appointed as Executive Committee Member of Madurai Nadar Mahajana Sangh
10.5.2023
மதுரை நாடார் மகாஜன சங்க செயற்குழு உறுப்பினராக கீழக்கடையம் ஆதிமூலம் நாடார் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரை செயற்குழு உறுப்பினராக சங்கத்தின் உயர்நிலைக்குழுவால் நியமிக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் நியமனம் அறிவித்துள்ளார். 2022-2025ம் ஆண்டு காலத்திற்கு செயற்குழு உறுப்பினராக நியமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் 13.5.2023 சனிக்கிழமை அன்று மதுரை அவனியாபுரத்தில் உள்ள சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் நடைபெறும் மகாஜன சங்க செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்காக கரிக்கோல் ராஜ், மற்றும் பரிந்துரை செய்த வாசுதேவநல்லூர் தவமணி நாடாருக்கும் ஆதிமூலம் நாடார் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆதிமூலம் இதற்கு முன்பு கீழக்கடையம் கூட்டுற சங்க தலைவராக இருந்தார். மற்றும் காங்கிரஸ் கட்சியின் தென்காசி மாவட்ட துணை தலைவராக இருக்கிறார்.