June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சர்கார் பட பாணியில் ரூ.1.5 லட்சம் செலவு செய்து ஓட்டு போட வந்தவர் ஏமாற்றம்

1 min read

Those who came to vote after spending Rs 1.5 lakh in Sarkar film style are disappointed

10.5.2023
சர்கார் பட பாணியில் ரூ.1.5 லட்சம் செலவு செய்து ஓட்டு போட வந்தவர் ஏமாற்றம் அடைந்தார்.

வெளிநாடுகளில்…

கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வெளியூர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த ராகவேந்திரசேத் அங்கிருந்து ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தார்.
‘சர்கார்’ படத்தில் வெளிநாட்டில் வசிக்கும் விஜய் தனது வாக்குரிமையை நிறைவேற்ற பல லட்சம் செலவு செய்து இந்தியா வருவார். அவரது ஓட்டினை வேறு ஒருவர் போட்டதால் தனது அதிரடியை தொடங்குவார். அதுபோன்ற சம்பவம் கர்நாடக தேர்தலிலும் நடந்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வெளியூர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்துள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த அவர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த ஆர்வத்துடன் வந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த ராகவேந்திரசேத் அங்கிருந்து ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தார்.
இதற்காக அவர் 14,000 கிலோமீட்டர் பயணம் செய்து ரூ.1.50 லட்சம் செலவு செய்து வந்தார். ஆனாலும் அவர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். ராகவேந்திரசேத்தின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அவர் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிடப்போவதாக தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.