June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

1 min read

Public meeting to explain DMK’s achievements at the store

10.5.2023
தென்காசி தெற்கு மாவட்டம்,கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கடையத்தில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்டம், கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க திமுக பொதுக்கூட்டம் கடையம் சின்ன தேர்திடலில் நடைபெற்றது. கடையம் ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். ரவண சமுத்திரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகாரி மீரா சாகிப், வின்சென்ட் பால், மாரியப்பன், சதாம் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார்.

தலைமைக்கழக பேச்சாளரும், மாநில விவசாய அணி துணைச் செயலாளருமான நல்ல சேதுபதி பங்கேற்று,தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினார். ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கடையம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் வழங்கினார்

கூட்டத்தில் பேச்சாளர் செங்கை குத்தாலிங்கம்,சசிகுமார்,சுரேஷ்,மகேஷ் பாண்டியன், ஞானராஜ், அரவிந்த், ஜெயராணி அண்ணாதுரை, அழகை முருகன்,ஒன்றிய துணை செயலாளர் முல்லையப்பன், பக்கீர் மைதீன், கோதர் மைதீன்,மாவட்ட பிரதிநிதிகள் வாகைகுளம் பெருமாள்,முகமது யாகூப், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், சுந்தரி மாரியப்பன், புஷ்பராணி, ரம்யா ராம்குமார் ஆவுடை கோமதி,பஞ்சாயத்து தலைவர்கள் மலர்மதி சங்கர பாண்டியன்,முகைதீன் பீவி அசன்,குயிலி லட்சுமணன், பொன்ஷீலா பரமசிவன்,ஜன்னத் சதாம் உசேன், மற்றும் அந்தோணிசாமி,அந்தோணி தாமஸ், மாடசாமிப்பாண்டியன், சங்கரபாண்டியன்

அருள், மீனாட்சிபுரம் முருகன், வேலையா, சக்தி சுப்பிரமணியன்,பிள்ளையார் குளம் இளங்கோ,, அருள் ஆரோக்கிய ராஜ் சுப்பையா மாரியப்பன், முருகன், பிச்சாண்டி, பாரதி நகர் சதீஷ்குமார்,அனுராதா,பிரமு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் சுரேஷ் நன்றி கூறினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.