“தேர்தல் முடிவுகள் குறித்து முழுமையாக ஆராய்வோம்” – கர்நாடக முதல்வர் பொம்மை பேட்டி
1 min read
“We will thoroughly investigate the election results” – Karnataka Chief Minister Boyam interview
13.5.2023
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக முயற்சி செய்தும் எங்களால் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற முடியவில்லை என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் “தேர்தல் முடிவுகள் குறித்து முழுமையாக ஆராய்வோம்” என்றும் கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. பாரதீய ஜனதா ஆட்சியை இழந்துள்ளது.
இந்தநிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக முயற்சித்தும் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற நாங்கள் தவறி விட்டோம். தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு முடிவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். இந்த முடிவினை வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாடமாக ஏற்றுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.