கோவிந்தபேரி ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்
1 min read
Free eye examination camp in Govindaberi panchayat
15.5.2023
கோவிந்தபேரி ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாமை முன்னாள் எம்.பி. ராமசுப்பு தொடங்கி வைத்தார். கண் குறைபாடுகள் உள்ள நோயாளிகளை கண்டறிந்து இலவச கண்ணாடிகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில் ஐஸ்வர்யா கண் பரிசோதனை மையம் மற்றும் கோவிந்தபேரி ஊராட்சி மன்றம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு முகாமினை தொடங்கி வைத்தார். இதில் கண் குறைபாடுகள் உள்ள நோயாளிகளை கண்டறிந்து இலவச கண்ணாடிகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் இசேந்திரன், சுப்பையா பாண்டியன், சுடலை முத்துப்பாண்டியன், மாரித்துரை, சிங்ககுட்டி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.