தென்காசியில் 19ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
1 min read
Private placement camp in Tenkasi on 19th
16.5.2023-
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 19.05.2023 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலக
முகவரியான கதவு எண் 168/23/24 முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் ஷோரூம் பின்புறம்) குத்துக்கல்வலசை அஞ்சல் தென்காசி. 627803 வைத்து நடைபெற இருக்கிறது.
இம்முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார் கள்.
இம்முகாமில்முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
மேலும் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தனியார் வேலைவாய்ப்பு பெற்றவர்களதுமுகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும்
பாதிக்கப்படாது.
மேற்கண்ட தகவலை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.