பஞ்சாப்பில்அத்துமீறி நுழைந்த 2 பாகிஸ்தான் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது
1 min read
In Punjab 2 trespassing Pakistani drones were shot down
பஞ்சாப்பில் அத்துமீறி நுழைந்த 2 பாகிஸ்தான் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
டிரோன்கள்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் உதார் தானிவால் சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்து சந்தேகத்திற்கு இடமாக பறந்த டிரோனை அவர்கள் சுட்டுவீழ்த்தினார்கள்.இதே மாவட்டத்தில் ரத்தன் குராட் பகுதியில் சர்வதேச எல்லையை தாண்டி நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் டிரோனையும் எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள். கறுப்பு நிறத்திலான இந்த 2 டிரோன்களை சோதனை செய்த போது அதில் 2 பாக்கெட்டுகளில் 2.6 கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.