June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

டாஸ்மாக்கில் ரூ.2000 நோட்டு வாங்கப்படும்

1 min read

Rs.2000 note will be bought in TASMAC- Minister Senthil Balaji announced

20.5.2023
டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக் கூடாது என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் அப்படி எவ்வித சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.

ரூ.2000 நோட்டுகள்

ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் அறிவித்துள்ளது.

மேலும், ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக்

இந்த அறிவிப்பை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதையும் மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்றும் டாஸ்மாக் நிர்வாகம் கூறி உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இது முற்றிலும் தவறான செய்தி என்றும் இதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் டாஸ்மாக் கடைகயில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.