தென்காசியில் மறுசுழற்சி கழிவுகள் சேகரிக்கும் மையங்கள் தொடக்கவிழா
1 min read
Inauguration of recycling waste collection centers in Tenkasi
21.5.2023
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தென்காசி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும்
மறுசுழற்சி கழிவுகள் சேகரிக்கும் மையங்கள் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி தென்காசி நகராட்சியில் களக்கோடி தெருவில் தென்காசி நகர்மன்றத்தலைவர் ஆர்.சாதிர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு 5 வது வார்டு நகர்மன்றஉறுப்பினர் கார்த்திகா முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில் அனைவரையும் வரவேற்று பேசினார். சுகாதார ஆய்வாளர்கள்
சேகர் மகேஷ்வரன் மாதவராஜ்குமார்
மற்றும் தென்காசி நகர திமுக நிர்வாகிகள் ஷேக்பரீத், பொத்தை மைதீன், சண்முகநாதன், மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் முத்துமாரியப்பன். எஸ்பிஎம். மேற்பார்வையாளர்.பரப்புரையாளர்கள், டிபிசி பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் திரளாககலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்றத்தலைவர் ஆர்.சாதிர் பேசியதாவது:-
.
தென்காசி நகராட்சியில் தொடங்கப்பட்டுள்ள மறுசுழற்சி கழிவுகள் சேகரிக்கும் மையங்கள் இன்று 20 மே முதல் வருகிற ஜூன் 5ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். இந்த மையங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தங்களுக்கு உபயோகம் இல்லாத மறுசுழற்சி கழிவுகள் மற்றும் பயன்படுத்தும் நிலையிலுள்ள துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள்,காலணிகள், பொம்மைகள், புத்தகங்கள், ஸ்கூல் பேக்குகள் மற்றும் இதர பொருள்களை கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும்.
நீங்கள் கொடுக்கும் பொருள்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றை தேவையுடையவர்கள் இங்கு வந்து பெற்றுச் செல்லலாம், அல்லது அவைகள் சேகரம் செய்யப்பட்டு தேவையான இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும்.தேவை அற்றவர்கள் பொருள்களை கொண்டு வந்து இந்த மையங்களில் சேர்க்கலாம், தேவை உடையவர்கள் இங்கு வந்து எடுத்துச் செல்லலாம்.
தேவையெனில் மையங்களை தொடர்பு கொண்டு சொன்னால் உங்களது இடங்களுக்கு கொண்டு வந்து நாங்கள் தருகிறோம். எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பொருட்களை மனமுவந்து தங்களுக்கு தேவையற்று வீட்டில் ஒதுக்கி வைத்துள்ள காலணிகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து இந்த மையங்களளில் ஒப்படைத்து நகரின் சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நாம் நலமாக இருந்தால் தான் சமுதாயம் நலமாக இருக்கும், சமுதாயம் நலமாக இருந்தால் தான் நமது நாடு நலமாக இருக்கும்எனவே, தேவையற்ற கழிவு பொருட்களை சாலைகளிலும், திறந்த வெளிகளிலும், கழிவுநீர் வாருகால்களிலும் வீசி எரிந்து இயற்கைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அந்த பொருட்களைக் கொண்டு வந்து ஒப்படைத்தால் அதை பாதுகாப்பான முறையில் தேவையுடையவர்களுக்கு வழங்குவதுடன் எதற்குமே ஆகாத பொருட்களை மறுசுழற்சிக்கு அனுப்பவும் நகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என்ற விவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
எனவே பொதுமக்கள் ஜூன் 5ஆம் தேதி வரை இச்சேவையை பயன்படுத்தி தென்காசி நகரின் நலம் பேணக் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு தென்காசி நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் பேசினார். முடிவில் தென்காசி நகராட்சி சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில் அனைவருக்கும் நன்றி கூறினார்.
-முத்துசாமி, நிருபர்