ஆலங்குளம் அருகே நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
1 min read
A worker was killed when a motorcycle collided with a lorry parked near Alankulam
22.5.2023
ஆலங்குளம் அருகே நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
தொழிலாளி
கடையம அருகே உள்ள வடமலைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கனகு. இவரது மகன் இசக்கிமுத்து(வயது 30). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 18-ந்தேதி இரவு வேலையை முடித்துவிட்டு ஆலங்குளத்தில் இருந்து அம்பை சாலையில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். காளத்திமடம் விலக்கு அருகே சென்றபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் இசக்கிமுத்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்கு ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.