July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் ஆதரவின்றி இறந்தவரை இந்துமுறைபடி நல்லடக்கம் செய்த இஸ்லாமிய பெண்

1 min read

A Muslim woman cremated a dead person in Tenkasi according to Hindu tradition

7.6.2023
தென்காசியில் ஆதரவின்றி இறந்தவரை இந்து முறைப்படி நல்லடக்கம் செய்த இஸ்லாமிய பெண்ணுக்கு இந்து குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள்.

ஆதரவின்றி..

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி ஒரு நபர் இறந்து கிடப்பதாக தென்காசி காவல்துறைக்கு பொதுமக்கள் மூலமாக தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தென்காசி காவல்துறை யினர் தென்காசியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டுவரும் பசியில்லா தமிழகம் மூலம் அவரது உடலை மீட்டு அவரது அடையாளங்களை சேகரித்து, அவரது குடும்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அவரிடம் எந்தவித அடையாள அட்டையோ தொலைபேசி எண்ணோ இல்லாததால் அவரது குடும்பத்தை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருந்துள்ளது.
இறுதியில் அவரது உடலை தென்காசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து பசியில்லா தமிழகம் குழுவினர்கள் மூலம் அனைத்து மத வழிபாடுகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்கம் செய்யப்பட்ட புகைப்படத்தை பசியில்லா தமிழகம் குழுவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
சமூக வலைதள நண்பர்கள் உதவியால் இந்த புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு அவரது குடும்பத்தை சென்றடைய வாய்ப்பாக அமைந்தது. இறந்து போன நபரின் உறவினர் மூலமாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது குடும்பத்தினர் உடனடியாக பசியில்லா தமிழகம் அமைப்பை தொடர்பு கொண்டு தென்காசிக்கு விரைந்தனர்.

தென்காசியில் அவர்களை அழைத்துக் தென்காசி காவல் நிலையம் சென்று அவருக்கான அனைத்து அடையாள அட்டைகளையும் காவல்துறையிடம் ஒப்படைத்து, அவரது குடும்பத்தினர் அடையாள அட்டையையும் காண்பித்து அவரது உடலை நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று அவர்களது இந்து முறைப்படி அனைத்து காரியங்களையும் செய்தனர்.

ஆதரவின்றி இறந்தவரின் உடலை கண்ணியமான முறையில் மாலை மரியாதையுடன் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்த பசியில்லா தமிழகம் நிறுவனர் ஜமீமா ஜின்னா அவர்களின் கரம்பிடித்து கண்ணீர் மல்க நன்றி கூறினர்.
ஒரு இஸ்லாமிய பெண்மணியாக இருந்து ஆதரவின்றி இறந்த தனது கணவனை மகளுக்கு மகளாக இருந்து நல்லடக்கம் செய்த ஜமீமா ஜின்னா – விற்கு சிவகங்கையில் இருந்து வருகை தந்த அவரது குடும்பத்தினர் கட்டிப்பிடித்து இருகரம் கூப்பி நன்றி செலுத்தினார்.
ஆதரவின்றி இறந்த அவரது கணவரை கண்ணியமான முறையில் அடக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல், தகவல் அறிந்து தென்காசிக்கு வருகை தந்த அவர்கள் குடும்பத்தை பசியில்லா தமிழகம் வாகனத்தில் அழைத்துச் சென்று காவல்துறையில் உரிய ஆவணங்களை சரிபார்த்து அன்றைய ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் கூடவே இருந்து அனைத்து பணிகளையும் முடித்து அவர்களை பேருந்து நிலையத்தில் சென்று வழி அனுப்பும் வரை கூடவே இருந்து அனைத்து பணிகளையும் செய்த பசியில்லா தமிழகம் நிறுவனர் ஜமீமா ஜின்னா அவர்களுக்கு சிவகங்கையில் இருந்து வருகை புரிந்த அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறி விடைபெற்றுச் சென்றனர்.

தமிழகத்திற்கு அனாதைகளாக யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் தமிழகத்திற்கு வந்த பிறகு யாரும் அனாதைகள் கிடையாது, நாங்கள் இருக்கிறோம் பசியில்லா தமிழகம் (8883340888)
ஜாதி மதம் பார்க்காமல் மனிதம் ஒன்றை மட்டுமே முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் தென்காசி காவல்துறை மற்றும் பசியில்லா தமிழகம் குழுவினரை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.