கருணாநிதி பிறந்தநாளில் தென்காசி அரசு மருத்துவமனையில் பிறந்த 13 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
1 min read
Gold rings for 13 children born at Tenkasi Government Hospital on Karunanidhi’s birthday
7.6.2023
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலைஞர் கருணாநிதி பிறந்த நூற்றாண்டு (ஜுன் 3) பிறந்த தினநாளில் பிறந்த 13 குழந்தைகளுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதன் தங்க மோதிரத்தை அணிவித்தார்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி தலைவர் செங்கோட்டை நசீர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு அணி அமைப்பாளர் இஞ்சி. இஸ்மாயில், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர், முன்னாள் நகர் மன்றத் தலைவர் வே.கோமதிநாயகம், அயலக அணி அமைப்பாளர் ஷமீம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் முருகன், பொறியாளர் அணி ஜாகிர் உசேன் , மாவட்ட துணை அமைப்பாளர்கள் கே.மோகன்ராஜ் , நாகப்பன், திமுக மாநில பேச்சாளர் வெல்டிங் மாரியப்பன், சர்ச்சில் மைதீன், ராமராஜ், அருணா பாண்டியன்,
மாவட்ட தொண்டரணி தலைவர் மிலிட்டரி வெங்கடேசன், இளைஞர் அணி யாசர் அரபாத, கஜேந்திரன், வடகரை ராமர், மட்டன் குமார், மீனாட்சி சுந்தரம், சசிகுமார் உள்ளிட்ட பல கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தங்க மோதிரம்அணிவித்தார்.
இந்திகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், மருத்துவர் ஷைனிப்பிரியா, கீழப்பாவூர் ஒன்றிய திமுக செயலாளர் க.சீனித்துரை மாவட்ட விவசாய தொழிலாளா அணி துணைத் தலைவர் நசீர், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டா கணேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் ராஜேஸ்வரி, பொறியாளர் அணி துணை அமைப்பாளா கபில்தேவதாஸ், மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், மகளி அணி சமூகவலைதள பொறுப்பாளர் ஷாலி மேரி, ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன் காமராஜ் நகர் செயலாளர் சுந்தர் பாவூர்சத்திரம் திமுக செயலாளர் நடராஜன் குருசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் அனைவருக்கும் நன்றி கூறினார்.