இனி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினால் அபராதம் – மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை
1 min read
If you ask for permission to perform Adal song, you will be fined – Madurai High Court warns
7.6.2023
ஆடல், பாடல் நிகழ்வுக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.
ஆடல் பாடல்
ஆடல், பாடல் நிகழ்வுக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.
கரூர் சிந்தாமணிபட்டியில் ஆடல், பாடல் நிகழ்வுக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஐகோர்ட்டு கிளை தள்ளுபடி செய்தது. கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்வுக்கு அனுமதி கோரி பொதுநல வழக்கை தாக்கல் செய்ய இயலாது என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும் இனி ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் மனுதாரருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.