July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

2024 எம்.பி. தேர்தலில் யார் வெற்றி பெறக்கூடாதுஎன்பது மிகவும் முக்கியம்-தென்காசியில் மு.க.கனிமொழி எம்பி பேச்சு

1 min read

2024 MP Who should not win the election- It is very important- M. K. Kanimozhi MP speech in Tenkasi

10.6.2023
2024 எம்.பி. தேர்தலில் யார் வெற்றி பெறக்கூடாது
என்பது மிகவும் முக்கியம் என்று மு.க.கனிமொழி எம்.பி. கூறினார்.

கனிமொழி எம்.பி.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான வழக்கறிஞர் க.கனிமொழி சிவராம பேட்டை பகுதியில் கட்டியுள்ள சர்வானந்த் இல்லத்தை திமுக மாநில துணை பொதுச்செயலாளர் மு.க.கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கென்னடி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் காசிதர்மம் துரை அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் எம் ஏ எம் ஷெரீப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது:-

உரிமை

தமிழ் இனத்தை, தமிழ் மொழியை தமிழகத்தின் உரிமையை ஒரு குழுவாக, உறவாக, உணர்வாக, உருவாக்க, வேண்டும்:என்பதற்காக வே கலைஞர் அனைவரையும் உடன்பிறப்பே என்று அழைத்தார்.
தமிழ்நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் இந்த உணர்வை வளர்க்க பாடுபட்டு வருகிறார் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் பேசும்போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது மிகவும் முக்கியம் என்று பேசினார். அதனை மனதில் கொண்டு நாம் அனைவரும் இப்போதே தேர்தலுக்கான பணிகளை துவக்க வேண்டும்.

தமிழ் மொழி தமிழ் இன, தமிழ் உணர்வு, தமிழர்களின் சரித்திரம் ஆகியவற்றை தன தாக்கி அதற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருபவர்கள் விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் க.கனிமொழியின் குடும்பத்தினர் சரவணன், கண்ணன், ராணி, அஞ்சுகம், கார்த்திக், பிரியங்கா தங்கமுத்து, ருத்ரா, கதிரவன் துரைச்சி பூசைத்துரை மற்றும் திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அப்துல் காதர் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் மாவட்ட செயலாளர் மா.செல்லதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதயநிதி நற்பணி மன்ற பொருளாளர் சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.