சேலம் ஈரடுக்கு பஸ்நிலையத்திற்கு கருணாநிதி பெயர்-மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min read
Karunanidhi Bayer-MUK Stalin inaugurated the Salem Erudku bus station
11.6.2023
சேலம் ஈரடுக்கு பஸ்நிலைத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அதை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சேலத்தில் மு.க.ஸ்டாலின்
சேலம் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார். இன்று காலை சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து ரூ.96 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
ஈரடுக்கு பஸ் நிலையம்
புதிய ஈரடுக்கு பஸ் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது
அதன் பின்னர் சேலத்தில் நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.1,367 கோடி மதிப்பிலான 390 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்., ரூ.235.81 கோடி மதிப்பிலான 331 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.