July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு

1 min read

Minister Ramachandran inspects the development works in Courtalam in person

11.6.2023
குற்றாலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

குற்றாலம்

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் குற்றால அருவி களில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். அப்போது அங்கு குளிப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள்.

அமைச்சர் ஆய்வு

இந்நிலையில் குற்றால பகுதிகளில் சுற்றுலாத்துறை சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவல ர்களுடன் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வுகள் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி மற்றும் சிற்றருவி ஆகிய அருவி கரை பகுதி களிலும் மேம்பாட்டு பணி களுக்காக ரூ. 11.34 கோடி தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2 மாதங்களுக்கு முன்பே இந்த பணிகளை தொடங்க அனுமதி கொடுத்திருந்த போதிலும் இங்கு சில பகுதிகள் வனத் துறை மற்றும் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்படி பல்வேறு துறை களிடமிருந்து தடையில்லா சான்று பெற்று தான் பணிகளை மேற் கொள்ள வேண்டிய சூழல் உள்ளதால் அதற்கான ஒப்புதல் சான்றிதழ் கிடை த்ததும் பணிகள் அனைத்தும் மேற் கொள்ளப்படும். அதற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் அனைத்தும் முழுவதுமாக முடிக்கப்படும். மேலும் குற்றாலம் அருவிக்கரைக்கு செல்ல இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த கட்டணம் என்பது எத்தனை பேர் குற்றாலத்துக்கு வருகிறார்கள் என்பதை கணக்கில் எடுத்து கொள்வதற்காக தான். எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று கணக்கெடுத்தால் தான் அதற்குரிய வசதிகளை செய்து கொடுக்க முடியும். சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் போது வியாபாரம் பெருகும். தங்கும் விடுதிகளுக்கும் வருமானம் கிடைக்கும். உள்ளூர் வளர்ச்சி ஏற்படும். உள்ளூர் வளர்ச்சி ஏற்படும் போது மாநிலமும் வளர்ச்சி யடையும். இருப்பினும் இருசக்கர வாகனத்திற்கு ரூ. 10 கட்டணம் என்பது வசூலிக்கப்பட மாட்டாது.

அரசு விடுதிகள்

சீரமைப்பு பணி குற்றாலத்தில் அரசு விடுதிகள் கட்டி முடிக்க ப்பட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளதால் அதனை சீரமைக்க உள்ளோம். குற்றாலத்தில் தனியார் அருவிகள் செயல்பாடுகள் குறித்து தகவல் எதுவும் வர வில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். அதை மாவட்ட கலெக்டர் மேற்கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது சுற்றுலா த்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலை குமார், பழனி நாடார் மற்றும் தனுஷ்குமார் எம்.பி., குற்றாலம் பேரூ ராட்சி செயல் அலுவலர் சுஷ்மா, சுகாதார அலுவலர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
மேலும் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை பகுதியிலும் ரூ. 1.50 கோடியில் ஓட்டல், தங்கும் விடுதிகள் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங் கப்பட உள்ளன. இந்த பணி களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் புதூர் பேரூராட்சி தலைவர் ரவிசங்கர், முன்னாள் நகர் மன்ற தலைவர் ரஹீம், தென்காசி யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.