பிரதமர் பற்றிய மு.க.ஸ்டாலின் புகாருக்கு அமித்ஷா பதில்
1 min read
Prime Minister has given 2.47 lakh crore rupees to Tamil Nadu in 9 years of rule – Amit Shah’s reply to Chief Minister
11.6.2023
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகாருக்கு மத்திய மந்திரி அமித்ஷா பதில் அளித்துளார். பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் தமிழகத்துக்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளார் என்று கூறினார்.
அமித்ஷா
வேலூரில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பெயர் எடுத்துள்ளவர் அண்ணாமலை. தமிழ் மொழியின் தொன்மைக்கு சிறப்பு சேர்த்தவர் பிரதமர் மோடி. காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்தி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. திருக்குறளை 23 மொழிகளில் மொழிபெயர்த்து அனைத்து மாநில மக்களும் படிக்க வழிசெய்திருக்கிறார் பிரதமர். 9 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்துக்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு 95,000 கோடி ரூபாய்தான் வழங்கப்பட்டது. தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிக்காக 58,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. 6 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது தமிழகத்தில் குடிநீர் இணைப்பு இல்லாத ஊர்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள்ளது. ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு சார்பில் 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது.
மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் மாணவர் படிக்கத் தொடங்கி விட்டனர். திமுக 18 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்தும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கூட கொண்டு வரவில்லையே, ஏன்? தமிழகத்தில் உள்ள ஏழைகளுக்கு 62 லட்சம் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.