பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம் என அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்
1 min read
ADMK says no alliance with BJP Emphasis on management in a consultative meeting
13,6,2023
அண்ணாமலைக்கு எதிராக பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். கூட்டணியை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல்.
அ.தி.மு.க. செயலாளர்கள்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, சமீப காலமாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு இடையே ஏற்பட்டுள்ள உரசல் குறித்து காரசாரமாக பேசப்பட்டது.
குறிப்பாக சமீபத்தில் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியது பற்றியும் விவாதிக்கப்பட்டது. அப்போது, அண்ணாமலைக்கு எதிராக பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
தீர்மானம்
இனியும் பாஜகவுடன் கூட்டணியில் நீடிப்பது நல்லதல்ல என்றும், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனவும் வலியுறுத்தினர். இதைடுத்து அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் கூட்டணியை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தெரிகிறது. இதன்மூலம் அதிமுக-பாஜக இடையே மீண்டும் மோதல் வலுத்துள்ளது. கூட்டணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.