கனம வளம் பற்றி தென்காசி கலெக்டரிடம் தே.மு.தி.க.வினர் மனு
1 min read
DMK’s petition to Tenkasi Collector about Kanama resource
13.6.2023
அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாக தென்காசி கலெக்டரிடம் தே.மு.தி.க. மனு கொடுத்துள்ளது.
தே.மு.தி.க.
தென்காசி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் பழனிசங்கர் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கலெக்டர் துரை ரவிச்சந்திரனிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:-
ரூ. 800 கோடி தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ரூ. 800 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதனை ஈடு செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து இழப்பீடு தொகையை அவர்களிடம் இருந்து பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனிம வளங்கள் தொடர்ந்து எடுக்கப்ப டுவதால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் இல்லாமல் போய்விடும். இது குறித்து கலெக்டர் நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். விதி மீறும் தனியார் குவாரிகள் அனைத்தையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கல்குவாரிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
கலந்து கொண்டவர்கள் நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சந்துரு சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர் முப்புடாதி முத்து, தென்காசி ஒன்றிய செயலாளர் வேலாயுத பாண்டியன், நகர செயலாளர் பேச்சி, ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன் (பாப்பாக்குடி), உதயகுமார் (கீழப்பாவூர்), வேதகண்ணு ரங்கசாமி (கடையம் வடக்கு), கேப்டன் மன்ற மாவட்ட செயலாளர் கேப்டன்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் பி.எம். சாமி, மாவட்ட துணை செயலாளர் காமராஜ் மோகன், ஆலங்குளம் நகர பொருளாளர் ராஜேந்திரன் என்ற தாசன், மத்தளம்பாறை ஜார்ஜ், பொதுக்குழு உறுப்பினர் சுரண்டை கருப்பு நிலா கணேசன், தென்காசி ரவி, ஆழ்வார்குறிச்சி பேரூர் செயலாளர் சண்முகம் சேட், வாசு, கழுநீர்குளம் செல்வம் உள்பட தென்காசி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.