தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
1 min read
People’s Grievance Day meeting in Tenkasi
13.6.2023
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன்; தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ்; 7 மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலிகள் தலா ரூ.8,500 வீதம், 1 மாற்றுத் திறனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலி தலா ரூ.13,500 வீதம், 1 மாற்றுத்திறனாளி பார்வையற்றோருக்கான நவீன மடக்கு குச்சி ரூ.8,500 வீதம், 1 மாற்றுத் திறனாளிக்கு முடநீக்கு கருவி ரூ.8,500 வீதம் ஆக மொத்தம் ரூ.90,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் 2022-ம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருது மற்றும் பரிசு தொகை தலா ரூ.1,00,000 வீதம் தனி நபர் முருகேசன் என்பவருக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன்; வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 274 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது.
இவை தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்(பொ) நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரா.சுதா, உதவி செயற்பொறியாளர் (மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்) ஜெபா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.