மம்தா பானர்ஜிக்கு வங்காள தேச பிரதமர் 600 கிலோ மாம்பழங்களை அனுப்பினார்
1 min read
The Prime Minister of Bangladesh sent 600 kg of mangoes to Mamata Banerjee
13/6/2023
மம்தா பானர்ஜிக்கு வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா 600 கிலோ மாம்பழங்களை அனுப்பி வைத்தார்.
மாம்பழம்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு அண்டை நாடான வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக வங்காளதேச துணை தூதரக அதிகாரி ஒருவர் கூறும்போது, தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும் லாங்ரா வகைகளை உள்ளடக்கிய மாம்பழங்கள் மம்தா பானர்ஜிக்கு வங்காளதேச பிரதமர் அனுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டும் மாம்பழங்களை அனுப்பி இருந்தோம் என்றார். அதேபோல் வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள் அனைவருக்கும் மாம்பழங்களை ஷேக் ஹசீனா அனுப்பி உள்ளார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் ஆகிய மாநில முதல்-மந்திரிகளுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மாம்பழங்களை அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.