தென்காசியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
1 min read
Anti-Child Labor Day Pledge Acceptance in Tenkasi
14.6.2023
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டு துறையின் மூலம் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியினை) மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன்; தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.
குழந்தை தொழிலாளர்
குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி – இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்.
மேலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து, குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பிரசுரத்தையும் பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்; வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்(பொ) நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரா.சுதா, தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் முத்துசிவா, சபரீசன், முத்திரை ஆய்வாளர்கள் நாகராஜன், சரவணமுருகன், காவல் துணை ஆய்வாளர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்bரா.ராமசுப்பிர மணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.