செங்கோட்டையில் திமுக பொதுக்குழு உறுப்பினர் மகன் வெட்டி கொலை- 2 பேர் தைது
1 min read
DMK general committee member’s son hacked to death in Sengottai – 2 injured
14.6.2023
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் திமுக பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வியின் மகனை பட்ட் பகலில் வெட்டி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க. பிரமுகர்
செங்கோட்டை ரயில்வே நிலையம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர் தென்காசி யூனியன் தலைவராக இருந்துள்ளார். தற்போது தமிழ்செல்வி திமுக பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார். இவரது மகன் ராஜேஷ் (வயது 27). இவர் செங்கோட்டை நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.
கொலை
இந்நிலையில் இன்று செங்கோட்டை நகராட்சி அலுவலகம் அருகில் பைக்கில் வந்த போது பின்னால் அவரை பைக்கில் தொடர்ந்து வந்த இருவர் ராஜேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாமடைந்த ராஜேஷ் பைக்கில் இருந்தபடியே பரிதாபமாக இறந்தார்.கொலையாளரிகள் சற்று தொலைவில் வைத்திருந்த பைக்கில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் விரைந்து சென்று ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தொன்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் பட்டப்பகலில் நடைபெற்ற இப்படுகொலை சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. ராஜேஷ் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இச்சம்பவம் குறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கொலை செய்த இருவரை வலைவீசி தேடி வந்தனர்.
கைது
இந்நிலையில் கொலையாளிகள் தப்பிச் சென்ற பைக்கின் நம்பரை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அம்பாசமுத்திரம் பகுதியில் அந்த பைக் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த பைக்கை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் பைக்கில் தப்பிச் சென்றது நாங்குநேரியை சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 22), மாரி (வயது 19) என தெரியவந்தது. அவ்விருவரையும் போலீசார் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது