தென்காசியில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
1 min read
Chief Minister’s Girl Child Protection Program Special Camp in Tenkasi
12.7.2023
தென்காசியில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
சிறப்பு முகாம்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் முதல்-அமைச்சரின் பெண் குழுந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தொடர்பான அசல் பத்திரம் வழங்குவது, வைப்புத் தொகை ரசீது, முதிர்வு தொகை பெற்று வழங்குதல், பெயர் மாற்றம், வங்கி கணக்கு மாற்றம், முகவரி மாற்றம் தொடர்பான 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இம்முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, துணை கலெக்டர் கவிதா, சகி-ஒன் ஸ்டாப் சென்டர் பணியாளர்கள், விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.