செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு
1 min read
Senthil Balaji’s custody extended till July 26
12.7.2023
செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ந்தேதி வரை காவல் நீட்டித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
செந்தில் பாலாஜி
சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அடையாறில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மாதம் 14-ந்தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதித்து அதன் பிறகு காவேரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்து அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளார். இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் காணொலி காட்சி வாயிலாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ந்தேதி வரை காவல் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.