பாளை தலைமை தபால் நிலைய 2-வது மாடியில் திடீர் தீ விபத்து
1 min read
A sudden fire broke out on the 2nd floor of Palai Head Post Office
14.7.2023
பாளை தலைமை தபால் நிலைய 2-வது மாடியில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தீவிபத்து
பாளை பகுதியில் தலைமை தபால் நிலையம் அமைந்துள்ளது. இந்த தபால் நிலையம் 3 மாடிகளுடன் செயல்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் தபால் நிலையமும், முதல் தளத்தில் சிக்கன நாணய சங்கம், 2-வது தளத்தில் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட வற்றுடன் இந்த அலுவலகம் செயல்படுகிறது.
இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலையில் 2-வது மாடியில் இருந்து கரும்பு புகை எழுந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாளை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்புத் வீரர்கள் தபால் நிலையம் அமைந்துள்ள இடத்துக்கு விரைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 2-வது தளத்தில் இருந்த கணினி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. சம்பவம் தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏதேனும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சந்திப்பு பகுதியில் ஒரு மருந்து கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் உடனடியாக வந்து தீயணைப்பு வீரர்கள் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.