June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

காமராஜர் திருவுருவ படத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

1 min read

Chief Minister M.K.Stalin paid tribute to Kamaraj Thiruvuruva by garlanding it

15.7.2023
காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காமராஜர் பிறந்தநாள்

காமராஜர் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசு சார்பில் இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளிகளில், மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நங்கநல்லூர் அரசுப் பள்ளியில் உள்ள காமராஜர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் அகராதிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.