இந்தியாவின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் காமராஜர்- பிரதமர் மோடி புகழாரம்
1 min read
Kamaraj who dedicated his life for the development of India- Prime Minister Modi is eulogized
15.7.2023
இந்தியாவின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் காமராஜர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
காமராஜர் பிறந்த நாள்
பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அவரது நினைவிடம் மற்றும் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளுகளை சேர்ந்தவர்கள், பொது மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கம் மூலம் மரியாதை செலுத்தினார். இதுகுறித்து பிரதமர் மோடி அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். சமூக அதிகாரமளிப்புக்கு அவர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாகும். வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் மீதான அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.