திப்பணம்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
1 min read
Educational equipment for Tippanam Patti Government School students
17.7.2023
திப்பணம்பட்டி அரசு பள்ளியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
காமராஜர் பிறந்தநாள்
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிர மணியன், கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் குமார் பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பெத்தநாடார்பட்டி வைகுண்டராஜ், கீழப்பாவூர் ஒன்றிய கவுன்சிலர் மேரி மாதா, திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்