கடையம் திமுக பிரமுகர் கருணாநிதி மறைவுக்கு சிவ.பத்மநாதன் அஞ்சலி
1 min read
Shiva Padmanathan Tributes to DMK Chief Karunanidhi
18.7.2023
தென்காசி மாவட்டம், கடையம் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் கடையம் க.சு.இராம கிருஷ்ணன் மகனும் கடையம் ஒன்றிய திமுக பொறுப்பு குழு உறுப்பினர் அண்ணாதுரையின் சகோதரருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் திமுக நிர்வாகிகளுடன் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
திமுக பிரமுகரும் மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தவருமான கருணாநிதியின் உடலுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
திமுக கழகத்தில் ஒன்றிய கழக செயலாளர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் முன்னாள் கடையம் ஒன்றிய திமுக செயலாளர் க.சு ராமகிருஷ்ணன் ஆவார். முன்னாள் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்கியவர்.
என்னை போன்ற இளம் வயதில் ஒன்றிய கழகச் செயலாளராக பொறுப்பேற்றவர்களை
பெரியவர்கள் வாழ்த்துகிற பொழுது கடையம் ஒன்றிய கழகச் செயலாளர் க. சு .ராமகிருஷ்ணன் போல கட்சிக்காரர்களுக்கு உழைக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
அந்த அளவிற்கு கடையம் ஒன்றியம் கடந்து மாவட்டம் முழுவதும் பெயர் பெற்றவர். அவரது குடும்பத்தில் தங்களின் பிள்ளைகள் அனைவருக்கும் கழகத் தலைவர்களின் பெயரைச் சூட்டி அழகு பார்த்தவர்.அந்த குடும்பத்தில் இளம் வயதில் ஒரு துக்க நிகழ்ச்சி நடந்திருப்பதை ஏற்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினர்ா.
இந்த நிகழ்ச்சியில் கடையம்
ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், ஆ.ஜெயக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.